Wednesday, January 15

நாட்டு துப்பாக்கி வெடித்து ஒருவர் பலி……




புதுக்கோட்டை அருகே வேட்டைக்கு சென்ற இரண்டு பேர் நாட்டு துப்பாக்கியை சரி செய்யும் போது அதிலிருந்து குண்டுகள் வெடித்து ஒருவர் வயிற்றில் குண்டு பாய்ந்து சிகிச்சை பலனின்றி இறப்பு மற்றொருவர் பிடித்து காவல்துறையினர் விசாரணை


புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன் இவருடைய உறவினர் சரவணன் இவர்கள் இரண்டு பேரும் அந்த பகுதியில் உள்ள காட்டுப் பகுதிக்கு வேட்டைக்கு செல்வதற்காக தங்களிடம் உள்ள நாட்டு துப்பாக்கி எடுத்துக்கொண்டு புறப்பட்டு உள்ளனர் அப்போது துப்பாக்கியில் விரிசல் ஏற்பட்டிருந்தது இருவருக்கும் தெரிய வந்தது இதனை தொடர்ந்து அருகில் இருந்த வெல்டிங் பட்டறைக்கு சென்று அங்கு வெல்டிங் அடித்து விட்டு செல்லலாம் என்று நினைத்து வெல்டிங் பட்டறைக்கு சென்றுள்ளனர்

அங்கு வெல்டிங்  செய்து கொண்டிருக்கும் போது தவறுதலாக நாட்டுத் துப்பாக்கி வெடித்ததாக கூறப்படுகிறது ஏற்கனவே அதில் பால்ராஜ் குண்டுகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது துப்பாக்கியில் இருந்து சீறி பாய்ந்து வந்த பல்ரஸ் குண்டுகள் லட்சுமணன் வயிற்றுப் பகுதியில் பாய்ந்ததாகவும் கூறப்படுகிறது இதில் பலத்த காயமடைந்த நிலையில் சரவணன் அவரை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கிருந்து திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட லட்சுமணன் சிகிச்சை பலனின்றி அங்கு இறந்தார் தற்போது லட்சுமணனின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட இங்கு வைக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில் சம்பவ இடத்தை திருச்சி சரக டிஐஜி மனோகரன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் தெய்வநாயகி உள்ளிட்டோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்

மேலும் சரவண கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர் இந்த நாட்டு துப்பாக்கி அவர்களும் எப்படி வந்தது என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டுள்ளனர் நாட்டு துப்பாக்கி வைத்திருப்பதற்கு இவர்கள் உரிமம் இல்லாமல் இருப்பதும் தெரிய வந்துள்ளது


இந்த சம்பவம் புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இதையும் படிக்க  "தீபாவளியில் பட்டாசு வெடிப்பு: நேரம் மற்றும் கட்டுப்பாடுகள் அறிவிப்பு"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *