வடமாநில கொள்ளையர்கள் நாமக்கலில் கைது: போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

image editor output image 1438397296 1727423217162 - வடமாநில கொள்ளையர்கள் நாமக்கலில் கைது: போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

கேரள மாநிலம் திருச்சூர் ஏடிஎம் மையங்களில் கொள்ளையடித்த வடமாநில கொள்ளையர்கள், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள பச்சாம்பாளையத்தில் சிறப்பாக நடத்திய காவல்துறையினரின் விரைவான நடவடிக்கையால் கைது செய்யப்பட்டனர்.

img 20240927 1318118114661225354605012 - வடமாநில கொள்ளையர்கள் நாமக்கலில் கைது: போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழப்புimg 20240927 131754774519053581363527 - வடமாநில கொள்ளையர்கள் நாமக்கலில் கைது: போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழப்புநிகழ்வின் போது, காலை வேகமாக சென்ற ஒரு கண்டெய்னர் லாரி, பள்ளிக்கு சென்ற குழந்தைகள் மீது மோதும் நிலையில் இரு கார்கள் மற்றும் நான்கு இருசக்கர வாகனங்களை மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் குமாரபாளையம் காவல் நிலையத்தில் உடனடியாக தகவல் தெரிவித்தனர்.

காவல்துறை ஆய்வாளர் தவமணி தலைமையில் போலீசார், லாரியை துரத்தி சென்றனர். இருப்பினும், லாரியை நிறுத்தாமல் வேகமாக சென்றது. இதனால், போலீசார் லாரியின் முன்னால் சென்று அதை நிறுத்த முயற்சி செய்தபோது, லாரியில் இருந்த கொள்ளையர்கள் கற்களை எடுத்து போலீசாரை தாக்கினர். இதில், காவல் ஆய்வாளர் தவமணி மற்றும் காவலர் ரஞ்சித் குமார் கடுமையாக காயமடைந்தனர்.

தப்பியோட முயன்ற கொள்ளையர்களில் ஒருவர், அடர்ந்த முள்ளுக்காட்டுக்குள் நுழைய முயன்றபோது, போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார். உடனடியாக சம்பவம் குறித்து மேலதிக தகவல் வழங்கப்பட்டு, அதிரடிப்படையினர் சம்பவ இடத்துக்கு வருகை தந்தனர்.

இதையும் படிக்க  கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில் ஈஷா எதிர்ப்பு கூட்டு இயக்கம் செய்தியாளர் சந்திப்பு

கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கையாக, ஈரோட்டிலிருந்து சேலத்திற்கு செல்லும் சாலை முழுவதும் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, லாரியில் இருந்து கட்டுக்கட்டாக பணமும் ஒரு சொகுசு காரும் கைப்பற்றப்பட்டது.

கேரள மாநிலத்தின் திருச்சூர் பகுதியில் ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள்தான் இவர்கள் எனக் கருதப்படுகிறது. கொள்ளையர்கள் 3 ஏடிஎம் மையங்களில் சுமார் 65 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நடந்து வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *