கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் சுவாமி விவேகானந்தர் கலை நற்பணி மன்றம் திருக்கோயில் தெய்வங்கள் அறக்கட்டளை மற்றும் பொள்ளாச்சி ஆர்ஷ வித்யா பீடம் இணைந்து ஜோதி நகர் தனியார் திருமண மண்டபத்தில் 9 நாட்கள் நடைபெறும் ஸ்ரீ சாராதா நவராத்ரி பெருவிழா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது பின்னர் 10 அடி உயரத்தில் நிறுவப்பட்ட ஸ்ரீ துர்கா தேவி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
திருப்புக்குழியூர் அவிநாசி ஆதீனம் ஸ்ரீ ல ஸ்ரீ காமாட்சி தாச சுவாமிகள் கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தார் இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த ஆதீனங்கள் நவராத்திரி விழா கொண்டாடுவதன் அவசியம் குறித்தும் கொலு வழிபாடு குறித்தும் பொதுமக்களிடையே பேசினர் விழாவில் உடுமலை செந்தில் என்பவரின் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சியை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
அதை தொடர்ந்து பக்தர்களிடையே பேசிய காமாட்சி தாச சுவாமிகள் முந்தைய காலங்களை விட தற்போது கொலு வழிபாடு குறைவாகி விட்டது அந்த குறைபாடுகளை களைந்து எல்லா கோவில்களிலும், வீடுகளிலும் இவ்விழாவை கொண்டாட புத்துணர்வு அளிக்க வேண்டும்.
அதற்கு இந்து அமைப்புகள் ஒருங்கினைந்து மக்களிடமும் சென்று நமது சமயத்தின் பெருமைகளை உணர்த்தினால் அனைத்து தரப்பு மக்களும் நவராத்திரி விழாவை கொண்டாடுவார்கள் இதன் மூலம் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதற்கு வாய்ப்பாக அமையும் என காமாட்சி தாச சுவாமிகள் பக்தர்களிடையே உரையாற்றினார். விழாவில் பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்புறங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்