திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சென்னைக்கு செல்லும் விரைவு பேருந்து இரவு புறப்பட்டு சென்று கொண்டிருந்தது
திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூர் மேம்பாலத்தில் சென்றபோது முன்னாள் மணல் ஏற்றி சென்ற டாரஸ் லாரியின் பின்னால் அரசு பேருந்து மோதிய விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 20க்கும் மேற்பட்ட நபர்களுக்கு படு காயம் அடைந்தனர்
இந்த விபத்தை அறிந்து வந்த சிறுகனூர் போலீசார் காயம் பட்ட பயணிகளை மீட்டு 108 மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் உதவியுடன் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்தில் ஓட்டுநர் உட்பட 10 நபர்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து சிறுகனூர் போலீசார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.