Thursday, October 30

கோவையில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு 215க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கௌரவிப்பு விழா !

கோவை: ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள கோ-இந்தியா ஆடிட்டோரியத்தில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மகத்தான ஆசிரியர்களை கௌரவிக்கும் விழா ரிஜன் சேர்பர்சன் MJF T.வெங்கடகிருஷ்ணன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வில் சிறப்பு விருந்தினராக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பாலகுருசாமி, உதவி ஆணையாளர் சேகர் மற்றும் லயன்ஸ் மாவட்ட ஆளுநர் நித்தியானந்தம், முதலாம் துணை ஆளுநர் ராஜசேகர் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை துவக்கி வைத்தனர்.

கோவையில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு 215க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கௌரவிப்பு விழா !

இதில், கோவை, பொள்ளாச்சி, ஈரோடு, உதகை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 215க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு விருது மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.

கோவையில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு 215க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கௌரவிப்பு விழா !
கோவையில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு 215க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கௌரவிப்பு விழா !

விழா குறித்து ரிஜன் சேர்பர்சன் T.வெங்கடகிருஷ்ணன் கூறுகையில், நம் வாழ்வில் முக்கிய இடத்தை வகிக்கும் ஆசிரியர்களை கௌரவிப்பது பெருமையாக இருப்பதாக தெரிவித்தார். PDG ஜீவானந்தம், இரண்டாம் துணை ஆளுநர் செல்வராஜ், GAT ஒருங்கிணைப்பாளர் சூரி நந்தகோபால் உள்ளிட்ட ஏராளமான லயன்ஸ் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் ஆசிரியர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இதையும் படிக்க  மருதமலை கோயிலுக்கு செல்லும் நான்கு சக்கர வாகனங்களுக்கு கட்டாய இ-பாஸ் பெற வேண்டியது அறிவிப்பு...
கோவையில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு 215க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கௌரவிப்பு விழா !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *