கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் மேலும் 4 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.
கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டில் நிகழ்ந்த கொலை, கொள்ளை சம்பவங்களில் காவலாளி ஓம் பகதூர் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக நீலகிரி மாவட்ட காவல் துறை வழக்கு பதிவு செய்து நடத்தி வந்த விசாரணையில் முக்கிய குற்றவாளியாக பதிவு செய்யப்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார். இதை அடுத்து இந்த வழக்கின் விசாரணை சி.பி.சி.ஐ.டி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கில் சயன், வாளையார் மனோஜ் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். சி.பி.சி.ஐ.டி போலீஸார் இதுவரை 300 க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தி உள்ளனர். இந்நிலையில் இந்த வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ள உதயன் மற்றும் தீபு ஆகியோர் ஜூலை 25 ஆம் தேதியும். ஜம்ஷீர் அலி மற்றும் ஜித்தின் ஜாய் ஆகியோர் ஜூலை 30 ஆம் தேதியும் கோவை சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.