பழுது அடைந்த மின் கம்பத்தை மாற்றித் தருமாறு சங்கராபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பிரியதர்ஷினி ஐயப்பனிடம் பொதுமக்கள் மனு மனு அளித்த சில மணி நேரங்களிலேயே நடவடிக்கை எடுத்து மின்கம்பங்களை மாற்றி அமைத்த ஊராட்சி மன்ற தலைவர் பிரியதர்ஷினி ஐயப்பனுக்கு பொதுமக்களிடமிருந்து பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சங்கராபுரம் முக்கிய தெருக்களில் பழுதடைந்த மின் கம்பம் மாற்றித் தருமாறு சங்கராபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பிரியதர்ஷினி ஐயப்பனுக்கு பொதுமக்கள் மனு அளித்து மனுவை பெற்றுக் கொண்ட ஊராட்சி மன்ற தலைவர் பிரியதர்ஷினி ஐயப்பன் பொதுமக்களின் தேவைகளை உணர்ந்து சில மணி நேரங்களிலேயே வள்ளுவர் நகர், தந்தை பெரியார் நகர் 6,8,4 ,1 வீதியில், காரைக்குடி டு திருச்சி மெயின் ரோடு பாண்டியன் நகர் காளியப்பன் நகர் பகுதியில் பழுதடைந்த மின் கம்பங்களை புதிதாக மாற்றி அமைத்தார்பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை உடனடியாக தீர்த்து வைத்த சங்கராபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பிரியதர்ஷினி ஐயப்பனுக்கு பொதுமக்களிடமிருந்து பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது இதனைத் தொடர்ந்து புதிதாக மாற்றப்பட்ட மின்கம்பங்களை சங்கராபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பிரியதர்ஷினி ஐயப்பன் முன்னாள் எம்எல்ஏ சுந்தரம் ஊராட்சி மன்ற உறுப்பினர் ரஞ்சித் குமார், மற்றும் திவாகர்,ஆகியோர் பார்வையிட்ட ஆய்வு செய்தனர்.