Wednesday, October 29

கோவையில் உதவும் கரங்கள்: ஓட்டுநர் நண்பர்கள் மனிதநேய சேவையில் முன்னணி…

கோவை மாவட்டத்தில் உள்ள உதவும் கரங்கள் மற்றும் அனைத்து வாகன சுற்றுலா ஓட்டுநர் நண்பர்கள் நலச்சங்கம், மாதம்தோறும் ஆதரவற்ற முதியோர் மற்றும் குழந்தைகளுக்கு உணவு வழங்கி வருகின்றனர். கடந்த 5 வருடங்களாக, இந்த அமைப்பு, ஓட்டுநர்களின் குடும்பங்களுக்கு மருத்துவ உதவி, ஓட்டுநர் மரணமடைந்தால் அவரது குழந்தைகளின் பெயரில் பணம் டெபாசிட் செய்வது போன்ற மனிதநேய பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

கோவையில் உதவும் கரங்கள்: ஓட்டுநர் நண்பர்கள் மனிதநேய சேவையில் முன்னணி...

மேலும், ரத்ததானம் மற்றும் பேரிடர் காலங்களில் பொருள் உதவி வழங்குவது உள்ளிட்ட பல்வேறு சேவைகளையும் நலச்சங்கம் மேற்கொண்டு வருகின்றது. சமீபகாலமாக, மாதம் ஒருமுறை ஏழை மற்றும் ஆதரவற்றவர்களுக்கு சுவையான உணவுகளை வழங்கி வருகின்றனர். சமூகத்தில் ஓட்டுநர்கள் இணைந்து இவ்வாறான நற்பணிகளில் ஈடுபடுவது, அனைவரிடமும் பாராட்டுக்களை பெற்றுள்ளது.

இதையும் படிக்க  மாற்றுத்திறனாளிகளுக்கான "சுவர்கா" அமைப்பின் 10ஆவது ஆண்டு விழா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *