Saturday, September 13

இஸ்லாமியர்கள் சீர்வரிசையுடன் பங்கேற்ற விநாயகர் சதுர்த்தி விழா

தமிழகத்தில் மிகவும் பிரபலமான பொள்ளாச்சி மாட்டுச்சந்தையில் மாட்டு வியாபாரிகள் சார்பில் ஏழாம் ஆண்டு சமத்துவ விநாயகர் சதுர்த்தி விழா கோலகாலமாக கொண்டாடப்பட்டது,

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக விநாயகர் சிலைக்கு மார்க்கெட் ரோட்டில்ல வசிக்கும் இஸ்லாமிய சமுதாயத்தினர் மாட்டு சந்தையில் உள்ள விநாயகருக்கு சீர்வரிசையாக விநாயகர் சிலை, ஆப்பிள் , ஆரஞ்சு மாலை , இனிப்பு வகைகளுடன் ஊர்வலமாக வந்து விநாயகர் சிலைக்கு மாலை அணிவித்து வழிபாடு செய்தனர்

இஸ்லாமியர்கள் சீர்வரிசையுடன் பங்கேற்ற விநாயகர் சதுர்த்தி விழா

அவர்களை மாட்டு வியாபாரிகள் சங்க மாநில செயலாளர் தென்றல் செல்வராஜ் திமுக கழக மாநில விவசாய அணி துணை தலைவர் தமிழ்மணி , நகர மன்ற துணைத் தலைவர் கௌதமன் , பொதுக்குழு உறுப்பினர் அமுதபாரதி நகரமன்ற உறுப்பினர் லதா செல்வரஜ் ஆகியோர் அனைவரையும் வரவேற்று இனிப்புகளை வழங்கினர்

விழாவில் கலந்து கொண்ட இஸ்லாமிய பெண்மணி ரெஜினா பானு கூறுகையில் பொள்ளாச்சி மாட்டு சந்தையில் ஏராளமான இஸ்லாமியர் பணியாற்றி வருகிறோம் ஜாதி பேதமற்ற மத நல்லிணக்கத்தோடு அனைவரும் ஒற்றுமையுடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் சீர்வரி வரிசையுடன் வந்து கலந்து கொண்டதாக தெரிவித்தார்

இதையும் படிக்க  பேரறிஞர் அண்ணாவின் 116வது பிறந்த நாளை முன்னிட்டு பொள்ளாச்சியில் திமுக சார்பில் மரியாதை, நலத்திட்ட உதவிகள், இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது....

விழா ஏற்பாட்டாளர் தென்றல் செல்வராஜ் கூறும்போதுவாரம் தோறும் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமை கூடும் பொள்ளாச்சி மாட்டுச் சந்தைக்கு ஆந்திரா கர்நாடகா கேரளா வியாபாரிகளும் உள்ளுர் விவசாயிகள் என ஆயிரக்கணக்கானோர் வந்து வர்த்தகத்தில் ஈடுபடுகின்றனர். ஜாதி பேதம் இன்றி அனைவரும் ஒற்றுமையுடன் தொடர்ந்து 7 ஆவது ஆண்டாக மாட்டுச்சந்தையில் சமத்துவ விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளதாகவும் அதற்காக இஸ்லாமிய சகோதர சகோதரிகள் இங்கு வந்து சீர்வரிசை வழங்கி வழிபாடு செய்துள்ளனர் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *