காரைக்குடி அருகே சோமநாதபுரம் காவல் நிலையத்தில் பணிபுரியும் சார்பு ஆய்வாளர் பிரணிதா, விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி தன்னை தாக்கியதாக அளித்த புகார் உண்மையல்ல என மாவட்ட காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த புகாரை அடிப்படையாக கொண்டு மாவட்ட காவல்துறையின் சார்பில் விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டது. காவல் நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், குறித்த கட்சி நிர்வாகி தாக்குதல் நடத்தியதாக எந்த ஆதாரமும் இல்லை என தெரியவந்துள்ளது. மேலும், சார்பு ஆய்வாளர் பிரணிதா, வேண்டுமென்றே தன்னை கத்தியால் தாக்கியதாக பொய் புகார் அளித்து மருத்துவமனையில் சேர்ந்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.