Tuesday, January 21

திண்டுக்கல் மருத்துவமனை தீ விபத்து: 6 பேர் உயிரிழப்பு – முதலமைச்சர் நிதியுதவி அறிவிப்பு

திண்டுக்கல் சிட்டி மருத்துவமனையில் நேற்று இரவு 9.30 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். முதல்-தளத்தில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து தீ பரவியதால் நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியேறியபோதும், சிலர் தீயில் சிக்கி உயிரிழந்தனர்.


உயிரிழந்தவர்களின் விவரம்:

மணிமுருகன் (30)

மாரியம்மாள் (50)

சுருளி (50)

சுப்புலட்சுமி (45)

ராஜசேகர் (36)

கோபிகா (6)


இவர்களது குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்ததுடன், நிவாரண உதவிகள் அறிவித்துள்ளார்.

முதலமைச்சரின் நிவாரண அறிவிப்பு:

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ₹3 லட்சம்

பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ₹1 லட்சம்

லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ₹50,000


தீ விபத்தில் காயமடைந்தவர்கள் திண்டுக்கல் அருகிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தீ விபத்து தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதையும் படிக்க  உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் 11ஆம் ஆண்டு விழா...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *