Thursday, October 30

கோவை அரசு மருத்துவமனையில் புதிதாக இரண்டு மையங்கள் திறப்பு…

கோவை அரசு மருத்துவமனைக்கு கோவை  மாவட்ட மக்கள் மட்டுமல்லாமல் , திருப்பூர்,ஈரோடு,நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த நோயாளிகள் ஆயிரக்கணக்கானோர் தினந்தோறும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கோவை அரசு மருத்துவமனையில் புதிதாக இரண்டு மையங்கள் திறப்பு...



இந்நிலையில் நோயாளிகள் மற்றும் நோயாளிகளின் உதவியாளர்கள் பயன்பெறும் வகையில் தனியார் அமைப்புகள் சார்பில் 24 மணி நேர தண்ணீர் மையம் மற்றும் தாய்மை கூடு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

சுமங்கலி ஜுவல்லர்ஸ், ஹெல்பிங் ஹர்ட்ஸ் ஆகியோர் இணைந்து உருவாக்கப்பட்ட இந்த மையத்தை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் மற்றும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல்வர் நிர்மலா ஆகியோர் மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தனர்.

இதன் மூலம் நோயாளிகளின் உதவியாளர்கள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் பயனடைவர். இந்த திறப்பு விழாவின் போது சுமங்கலி ஜுவல்லர்ஸ் சேர்மன் விஸ்வநாதன், இயக்குனர் அஷ்யந்த், ஹெல்பிங் ஹார்ட்ஸ் நிறுவனர் கணேஷ் ஆகியோர் இருந்தனர்.

கோவை அரசு மருத்துவமனையில் புதிதாக இரண்டு மையங்கள் திறப்பு...
 
இதையும் படிக்க  அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவிகளை வழங்கிய கோவை ஆட்சியர்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *