கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள், தங்களின் நீண்டகால நிலுவை கோரிக்கைகளை தமிழக அரசிடம் வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக கோசங்களை எழுப்பி, அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டம் தமிழகம் முழுவதும் நடத்தப்படும் என முன்கூட்டியே அறிவிக்கப்பட்ட நிலையில், கோவையில் நடந்த இந்த நிகழ்வில், போராட்டக்காரர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால், போலீசார் தடுத்து நிறுத்தி, அவர்களை கைது செய்து வாகனங்களில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.