Sunday, April 27

“கோவையில் நீர்நிலைகள் மாசுபாடு மற்றும் மறுசீரமைப்பு கருத்தரங்கம்”

கோவையில் நடைபெற்ற நீர்நிலைகள் மாசுபாடு மற்றும் மறுசீரமைப்பு குறித்த சர்வதேச கருத்தரங்கம், நீர்நிலைகளின் மாசுபாட்டின் சமூக பொருளாதார தாக்கங்கள் மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் என்ற தலைப்பில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி, இங்கிலாந்தின் டீசைடு பல்கலைக்கழகம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் முனைவர் ஆறுச்சாமி ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் கூட்டாண்மையில் நடைபெற்றது.

"கோவையில் நீர்நிலைகள் மாசுபாடு மற்றும் மறுசீரமைப்பு கருத்தரங்கம்"

கருத்தரங்கின் துவக்க விழாவில், கொங்குநாடு கல்லூரியின் இயக்குநர் டாக்டர் சி.ஏ. வாசுகி தலைமையுரையாற்றினார். தொடர்ந்து, இங்கிலாந்து டீசைடு பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் செந்திலரசு சுந்தரம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் முனைவர் ரவிராஜ், இந்திய அறிவியல் கழகத்தின் கோயம்புத்தூர் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் பால்சாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

"கோவையில் நீர்நிலைகள் மாசுபாடு மற்றும் மறுசீரமைப்பு கருத்தரங்கம்"

இந்த கருத்தரங்கில், டீசைடு பல்கலைக்கழகத்தின் நிலைப்பொருளியல் மைய பேராசிரியரும் இணைமுதன்மையருமான முனைவர் டேவிட் ஹியூஸ் முக்கிய உரையாற்றினார். அவர் தனது உரையில் ஜவுளித் தொழிலின் சுழற்சிமுறை, நெகிழி மறுசுழற்சி மற்றும் வேதியியல் கழிவுகளை நிர்வகிக்கும் நுட்பங்களை விளக்கினார். நீர்நிலைகளை மாசுபாடுகளிலிருந்து மீட்கும் வழிமுறைகள் குறித்தும் எடுத்துரைத்தார்.

இதையும் படிக்க  பாறு கழுகுப் பாதுகாப்புச் செயல்பாட்டுக் குழுக் கூட்டம்...
"கோவையில் நீர்நிலைகள் மாசுபாடு மற்றும் மறுசீரமைப்பு கருத்தரங்கம்"

கருத்தரங்கத்தின் முக்கிய நிகழ்வாக, நீர்நிலைகள் மாசுபாட்டின் சமூக பொருளாதார தாக்கங்கள் மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக்கட்டுரைகளின் தொகுப்பை டாக்டர் சி.ஏ. வாசுகி வெளியிட, முனைவர் டேவிட் ஹியூஸ் பெற்றுக்கொண்டார்.

"கோவையில் நீர்நிலைகள் மாசுபாடு மற்றும் மறுசீரமைப்பு கருத்தரங்கம்"

இந்த நிகழ்வில் இங்கிலாந்து, மலேசியா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளின் அறிஞர்கள் மற்றும் இந்தியாவின் பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களின் பேராசிரியர்கள் ஆய்வுரைகள் நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியின் நிறைவில் ஒருங்கிணைப்பாளர் முனைவர் முத்துக்குமார் நன்றி தெரிவித்து நிகழ்வை முடித்தார்.

"கோவையில் நீர்நிலைகள் மாசுபாடு மற்றும் மறுசீரமைப்பு கருத்தரங்கம்"
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *