Monday, September 15

புதிய திட்டங்களை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்…

கோவையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் பல்வேறு புதிய திட்டங்கள் மற்றும் அபிவிருத்தி பணிகள் துவக்கப்பட்டன. குனியமுத்தூர் பகுதியில் வார்டு எண் 88-க்கு உட்பட்ட அரசு அலுவலர் காலனியில் ரூ.31 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா அபிவிருத்தி பணிகள் பகுதி கழக செயலாளர் சி.லோகநாதன் முன்னிலையில் துவங்கப்பட்டது.

இதேபோல், இராமசெட்டி பாளையத்தில் உள்ள வார்டு எண் 89-க்குட்பட்ட மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் ரூ.62.60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறைகள் வார்டு கவுன்சிலர் K.முருகேசன் முன்னிலையில் திறக்கப்பட்டன. வார்டு எண் 79-ல் முத்துச்சாமி காலனி மற்றும் க்ரீன் பார்க் சாலை இணைக்கும் இடத்தில் ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட இரும்பு பாலம் வார்டு கவுன்சிலர் வசந்தாமணி பழனிச்சாமி முன்னிலையில் திறந்துவிடப்பட்டது.

செல்வபுரம் பகுதியில் வடக்கு ஹவுசிங் யூனிடில் ரூ.8.90 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் பகுதி கழக செயலாளர் கேபிள் மணி மற்றும் கவுன்சிலர் சிவசக்தி முன்னிலையில் திறக்கப்பட்டது. மேலும், தேவாங்க ஆரம்பப்பள்ளியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட இரண்டு வகுப்பறைகள் பகுதி கழகச் செயலாளர் சுரேஷ் நாராயணன் மற்றும் கவுன்சிலர் சர்மிளா சுரேஷ் நாராயணன் முன்னிலையில் திறக்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சியர் காந்தி குமார் பாடி, கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி.ப.ராஜ்குமார், மேயர் கா.ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், மத்திய மண்டல தலைவர் மீனாலோகு, நகரமைப்பு குழு தலைவர் சோமு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

 
இதையும் படிக்க  TTV TROPHY SEASON 2 கிரிக்கெட் போட்டி...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *