![18% ஜிஎஸ்டி ரத்து செய்ய கோரி வணிகர் சங்கங்கள் கண்டன ஆர்ப்பாட்டம்! 18% ஜிஎஸ்டி ரத்து செய்ய கோரி வணிகர் சங்கங்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!](https://thenewsoutlook.com/wp-content/uploads/2025/01/IMG-20250103-WA0037-1024x576.jpg)
கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை கொங்கு மண்டலம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநிலத் தலைவர் சௌந்தரராஜன் தலைமை தாங்கினார், முன்னிலை மெஸ் மெர் காந்தன் வெள்ளையன் வகித்தார். 18% ஜிஎஸ்டி வரியை ரத்து செய்யக்கோரி மத்திய பாரதிய ஜனதா அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. நூற்றுக்கணக்கான வணிகர் சங்கங்களின் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். மாவட்ட தலைவர் லிங்கம் வரவேற்புரையாற்றினார். பின்னர், பத்திரிகையாளர்களை சந்தித்த சௌந்தரராஜன், ஜிஎஸ்டி வரியை திரும்பப் பெற மத்திய அரசுக்கு பல்வேறு கட்ட போராட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன என்றும், இது சரி செய்யப்படாவிட்டால் கடை அடைப்பு மற்றும் மறியல் போன்ற மாபெரும் போராட்டங்களை நடத்துவோம் என்றும் தெரிவித்தார்.
![18% ஜிஎஸ்டி ரத்து செய்ய கோரி வணிகர் சங்கங்கள் கண்டன ஆர்ப்பாட்டம்! 18% ஜிஎஸ்டி ரத்து செய்ய கோரி வணிகர் சங்கங்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!](https://thenewsoutlook.com/wp-content/uploads/2025/01/img-20250103-wa00365662948567930324370-1024x576.jpg)