இந்தியாவில் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தால் விவசாயம். மருத்துவம் முதியோர் பராமரிப்பில் பெரும் சாதனை நிகழப்போகிறது கோவை கங்கா மருத்துவமனை விழாவில் டாடா சன்ஸ் நிறுவன தலைவர் சந்திரசேகரன் பெருமிதம்
கோயம்புத்தூர் கங்கா மருத்துவமனை நிறுவனர் நாள் விழா நடைபெற்றது நிகழ்விற்கு டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவர் என் சந்திரசேகரன் பங்கேற்று புதிய இந்தியாவிற்காக ஆரோக்கியம் மற்றும் பாரம்பரியத்தை மறுவடிவமைத்தல்’ எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள கங்கா மருத்துவமனையில் நிறுவனங்கள் சண்முகநாதன் கனகவல்லி தம்பதியர் உருவாக்கப்பட்ட கங்கா மருத்துவமனை போற்றும் வகையில் நிறுவனர் நாள் விழா மருத்துவமனை வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை மருத்துவமனை இயக்குனர் டாக்டர் எஸ் ராஜசபாவதி வரவேற்றார் காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்
கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிர்வாக இயக்குனர் எம் கிருஷ்ணன். கங்கா மருத்துவமனை நிறுவனர் குறித்து கங்கா மருத்துவமனையில் நிறுவனர் நாள் விழா அதன் வளர்ச்சிக்கு குறித்து பேசினார்
மருத்துவமனையின் இயக்குனர் ராஜசேகரன் கங்கா மருத்துவமனையின் செயல்பாடுகள் குறித்து விவரித்தார் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக டாட்டா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் என் சந்திரசேகரன் பங்கேற்று பேசியதாவது.
நாட்டில் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ட் துறை வேகமாக வளர்ச்சி பெற்று வருகிறது இதில் மருத்துவ சார்ந்த துறை பெறும் பயனை பெரும் வகையில் ஏ ஐ தொழில்நுட்பம் வருகிறது.
வரும் 2050 ஆம் ஆண்டில் உலகில் அதிக முதியோர் உள்ள நாடாக இந்தியா இருக்கும் இந்த முதியோருக்கு தேவையான வசதி வாய்ப்புகளை ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் துரை மூலம் ஈடு செய்யலாம் அதற்கு தயாராக இருக்க வேண்டும்.
நாட்டில் தற்போது பெரும் சவாலாக உள்ள புற்றுநோய் மற்றும் சர்க்கரை நோயாக இருக்கிறது இவற்றிற்கு தீர்வாக மருந்து கண்டுபிடிக்கும் சூழல் விரைவில் உருவாகும் புற்றுநோய் எந்த நிலையில் இருந்தாலும் அவற்றை இந்த ஏ ஐ. தொழில்நுட்பம் மூலம் மூலம் குணப்படுத்தலாம்
விவசாயத் துறையிலும் அதிகமாக மகசூல் பெற ஒரே பயிர்களை பயிரிட்டு விலை குறையும் சூழ்நிலையும் வீணாக்கும் சூழ்நிலையையும் புதிய தொழில்நுட்பங்கள் மாற்றி அமைக்கும் கால நிலைக்கு ஏற்ற விலைப் பொருள்களை உற்பத்தி செய்ய அரசுடன் சேர்ந்து ஏ ஐ தொழில்நுட்பமும் வருங்காலத்தில் வரும் என்று கூறினார்
நிகழ்ச்சியில் நிறுவன நாள் குறித்த நினைவு பதக்கத்தை கங்கா மருத்துவமனையின் இயக்குனர்கள் டாட்டா குழும தலைவருக்கு வழங்கி கௌரவித்தனர்.
நிகழ்ச்சியில் கங்கா மருத்துவமனை இயக்குனர்கள் ரமா ராஜசேகர. நிர்மலா ராஜ சபாபதி. மாநகரகாவல். முன்னாள் டிஜிபி ஏகே விஸ்வநாதன். தொழிலதிபர்கள் கிருஷ்ணராஜ் வானவராயர். பிரிக்கால் வனிதா மோகன். கே பி ஆர் ராமசாமி. எஸ் எஸ் வி எம் மோகன்தாஸ் எஸ் என் எஸ் சன்ஸ் நிர்வாக அறங்காவலர் சுந்தர். பண்ணாரி அம்மன் குழுமத் தலைவர் எஸ் வி பாலசுப்ரமணியம். ஜெம் மருத்துவமனை தலைவர் பழனிவேல். என் ஜி பி கல்வி குழும தலைவர் தவமணி பழனிசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் தொழிலதிபர்கள் மற்றும் மருத்துவர்கள் பல்வேறு கேள்விகளுக்கு டாட்டா குழும தலைவர் சந்திரசேகர் பதில் அளித்தார்