Monday, January 13

நாளை ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் – போக்குவரத்து மாற்றம்…

பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது இந்த திருக்கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமிதரிசனம் செய்ய வருகை தருகின்றனர். மாசாணி அம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா பதினான்கு ஆண்டுகளுக்கு பிறகு 12.12.2024 ம் தேதி நடைபெற உள்ளது. அதிகப்படியான பக்தர்கள் வருகையை முன்னிட்டு சுமார் 1100 காவல்துறையினர் மற்றும் ஊர் காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் 11 CAR PARKING மற்றும் 2 TWO WHEELER PARKING ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாளை ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் - போக்குவரத்து மாற்றம்...



போக்குவரத்து வழித்தடங்கள்

1. பொள்ளாச்சியிலிருந்து வேட்டைகாரன்புதூர், சேத்துமடை, காளியாபுரம், டாப்சிலிப் செல்லும் கனரக வாகனங்கள், இலகு ரக வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் அனைத்தும் கோட்டூர், பொங்காளியூர், மயிலாடுதுறை, பொன்னாலம்மன்துறை வழியாக செல்ல வேண்டும்.

அதே போல் டாப்சிலிப், காளியாபுரம், சேத்துமடை, வேட்டைகாரன்புதூரிலிருந்து பொள்ளாச்சி செல்லும் கனரக வாகனங்கள், இலகு ரக வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் அனைத்தும் பொன்னாலம்மன்துறை, மயிலாடுதுறை, பொங்காளியூர், கோட்டூர் வழியாக செல்ல வேண்டும்

2. உடுமலை நாமூசுங்கம் சங்கம்பாளையம் ஆனைமலை வழியாக கேரளா செல்லும் கனரக வாகனங்கள், இலகுரக வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் அனைத்தும் நா.மூ.சுங்கம் பொள்ளாச்சி வழியாக கேரளா செல்ல வேண்டும்.

அதே போல் கேரளாவிலிருந்து மீன்கரை சாலை வழியாக கிழவன்புதூர் செம்மேடு வழியாக ஆனைமலை வர கனரக வாகனங்களுக்கும், இலகுரக வாகனங்களுக்கும் அனுமதியில்லை.

3. இராமசந்திராபுரம் ரோடு வழியாக வேறு இலகுரக வாகனங்களுக்கும் கனரக வாகனங்களுக்கும் அனுமதியில்லை.

4. கோயிலுக்கு வரும் அனைத்து வாகனங்களும் அம்பராம்பாளையம் வழியாக தான் வர வேண்டும்.

5. வேட்டைக்காரன்புதூர் பிரிவு, அம்பராம்பாளையம் மற்றும் அய்யாமடை பிரிவு ஆகிய பிரிவுகளில் கோயிலுக்கு வரும் வாகனங்களைத் தவிர வேறு வாகனங்களுக்கு அனுமதியில்லை.

போக்குவரத்து நிறுத்தங்கள்

1. மதுரை திண்டுக்கல் பழனி மார்க்கமாக ஆனைமலை வரும் அனைத்து அரசு பேருந்துகளும் N.M.சுங்கம் சங்கம்பாளையம் அய்யாமடைபிரிவு ஆனைமலை முக்கோணம் வழியாக LRT அருகில் உள்ள தனியார் இடத்திலுள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் நிறுத்த வேண்டும். அதே போல் தென்மாவட்டங்களுக்கு திரும்பி செல்லும் வாகனங்கள் இதே வழியை பயன்படுத்த வேண்டும்.

2. ரெகுலர் பேருந்துகள் NM சுங்கம் சங்கம்பாளையம் அய்யாமடைபிரிவு

ஆனைமலை முக்கோணம் ஆனைமலை பழைய பேருந்து நிலையம் வந்து பயணிகளை இறக்கி ஏற்றிக்கொண்டு திரும்ப வந்த அதே வழியில் செல்லவேண்டும்

3. அம்பராம்பாளையத்தில் இருந்து ஆனைமலை கோயிலுக்கு வரும் இலகு ரக வாகனங்கள் LRT அருகிலுள்ள தனியாருக்கு சொந்தமான தற்காலிக பேருந்து நிறுத்தத்தில், Co-operative Bank Back Side பார்க்கிங் ஆகிய இடங்களில் உள்ள பார்க்கிங்களை பயன்படுத்த வேண்டும்.

இதையும் படிக்க  திருச்சியில் தமிழ் புதல்வன் திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர்...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *