பீஹாரில் இருந்து சட்ட விரோதமாக நாட்டு துப்பாக்கிகளை வாங்கி, கோவையில் விற்பனை செய்தது தொடர்பாக, மூவரை தீவிரவாத நடவடிக்கைகள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
போலீசாருக்கு கிடைத்த தகவலின்படி, பீஹாரில் இருந்து துப்பாக்கி கொண்டு வந்து கோவையில் விற்பனை செய்யும் செயல் முறையை கண்காணித்தனர். இதனையடுத்து, கோவை சேரன் மாநகரத்தைச் சேர்ந்த மணிகண்டன் (23), காளப்பட்டியைச் சேர்ந்த ஹரிஸ்ரீ (23) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், இவர்களுக்கு துப்பாக்கி விற்பனை செய்த பீஹாரைச் சேர்ந்த குந்தன் ராய் (22) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் துப்பாக்கிகளை எதற்காக வாங்கினர்? கூலிப்படையாக செயல்படும் கும்பலுக்கு தொடர்புடையவர்களா? அல்லது இதற்கு முன் நடந்த குற்றச்செயல்களுடன் இணைப்பிருக்கிறதா என்பதைக் கண்டறிய தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இது வரை வேறு யாருக்கு யாருக்கு துப்பாக்கி விற்பனை செய்யப்பட்டுள்ளது என்றும் விசாரணை மேல் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.