தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கோவை வடக்கு மாவட்டம் செல்வபுரம் பகுதி கழகம் சார்பில், கோவை மாநகராட்சி 76, 77, 78 மற்றும் 79 வார்டுகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், மின்வாரிய ஊழியர்கள் உள்ளிட்ட அனைத்து துறை ஊழியர்களுக்கு அறுசுவை உணவு மற்றும் புத்தாடை, இனிப்புகளை வழங்கும் விழா செல்வபுரம் சமுதாய கூடத்தில் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில், கோவை வடக்கு மாவட்ட கழக செயலாளர் தொ.அ. ரவி களப்பணியாளர்களுக்கு உணவும், புத்தாடையும், இனிப்பும் வழங்கினார். விழாவுக்கு ஏற்பாடு செய்த செல்வபுரம் பகுதி திமுக செயலாளர் கேபிள் மணி, துணை மேயர் வெற்றி செல்வன், மாமன்ற உறுப்பினர்கள் சிவசக்தி ராஜ்குமார், வசந்தாமணி மற்றும் வட்டக் கழக செயலாளர்கள் அறிவழகன், ராஜேஷ், இப்றாகீம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
களப்பணியாளர்களுக்கான உற்சாக நிகழ்வு
தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட பல துறை ஊழியர்களின் பங்களிப்புக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், சமூக நலனுக்காக இடம் பெற்ற இந்த விழா, அனைவரையும் மகிழ்ச்சியடையச் செய்தது.