Thursday, October 30

ஆசியா நகை கண்காட்சி…


கோவை பந்தய சாலையில் உள்ள விவாண்டா ஹோட்டலில் பிப்ரவரி 7, 8, மற்றும் 9ஆம் தேதிகளில் தென்னிந்தியாவின் பிரபலமான ஆசியா ஜூவல்ஸ் ஷோ 2025 அதன் 52வது பதிப்பை விமரிசையாக தொடங்கியுள்ளது.

ஆசியா நகை கண்காட்சி...

இந்த பிரமாண்டமான நகை கண்காட்சியில், இந்தியா முழுவதிலுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நகைக்கடைக்காரர்கள் அவர்களின் சிறந்த நகை வடிவமைப்புகளை ஒரே இடத்தில் வெளிப்படுத்துகின்றனர். கண்காட்சி மற்றும் விற்பனை நேரம் தினமும் காலை 10.30 மணிமுதல் இரவு 8 மணி வரை நடைபெறும்.

ஆசியா நகை கண்காட்சி...

ஆசியா ஜூவல்ஸ் ஷோ 2025 இன் தொடக்க விழாவில் வர்த்தக மற்றும் தொழில்துறை தலைவர் ராஜேஷ் லுண்ட் (ICICIJ தலைவர்), ஜூவல்லரி கியூரேட்டர் சங்கீதா பீட்டர், P & S குழும நிறுவனங்களின் நிறுவனர் பிரியங்கா சுந்தர், ஹெல்த் பேசிக்ஸ் & கோவின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்வாதி ரோஹித், தாஜ் ஜிட்டோ பெண்கள் பிரிவுத் தலைவர் ரீனா கோத்தாரி, திருமதி உலக அழகி ரிங்கி ஷா உள்ளிட்ட முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

இந்த கண்காட்சி நகை பிரியர்களுக்கும் வணிகத் துறையினருக்கும் ஒரு அரிய வாய்ப்பாக அமைந்துள்ளது.

இதையும் படிக்க  தொழிலாளர்கள் மின் கட்டண உயர்வு, வரி விதிப்பு குறித்து கவலை
ஆசியா நகை கண்காட்சி...
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *