Wednesday, February 5

புல்லட் ராஜா யானை முத்துக்குளி வயலுக்கு விடப்பட்டது

கூடலூர் வனக்கோட்டத்தில் வீடுகளை இடித்து வந்த புல்லட் ராஜா என்ற ஆண் காட்டு யானையை 2024-ஆம் ஆண்டு டிசம்பர் 28-ம் தேதி பிடித்து, ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வைக்கப்பட்டது. அங்கு யானைக்கு தேவையான இலைதழைகள் மற்றும் உணவுகள் வழங்கப்பட்டு, கமாண்டுகள் வழங்கப்படவில்லை. கால்நடை மருத்துவ குழுவும் யானையை கண்காணித்தது.

25 நாட்களுக்குப் பிறகு, புல்லட் ராஜா யானையை முத்துக்குளி வயல் பகுதியில் உள்ள களக்காடு – முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு மாற்றி அனுப்புவதற்கான உத்தரவு வன உயிரின காப்பாளர் வழங்கினார். இன்று அந்த யானையை முத்துக்குளி வயலுக்கு கொண்டு சென்று, அங்கு விடப்பட்டது. இதற்கு முன்பு, அரிகொம்பன் என்ற மற்றொரு யானையும் தேனி பகுதியில் பிடிக்கப்பட்டு, முத்துக்குளி வயலுக்கு விடப்பட்டது. இப்போது, அந்தப் பகுதியிலுள்ள புற்கள் மற்றும் தண்ணீருடன் சேர்ந்திருந்து, அங்கு உள்ள யானைகளுடன் பயணித்து வருகிறான். காட்டை விட்டு வெளியேறாமல், அந்த இடத்தில் தொடர்ந்து வாழும் வாய்ப்பு வாய்ப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

இதையும் படிக்க  அக்காமலை தேசிய பூங்காவில் அபூர்வ ஊர்வன உயிரினங்கள் கண்டுபிடிப்பு !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *