Wednesday, September 10

பட்டுக்கோட்டையில் பாஜக பெண் நிர்வாகி தலையை துண்டித்து கொலை…

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில், பாஜக மகளிர் அணியின் முன்னாள் நிர்வாகியாக பணியாற்றிய சரண்யா (வயது 35) என்ற பெண் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சரண்யா, திருமணத்திற்குப் பிறகு தனது இரண்டாவது கணவர் பாலனுடன் பட்டுக்கோட்டையில் குடியேறி, அங்கு ஜெராக்ஸ் மற்றும் டிராவல்ஸ் கடை ஒன்றை நடத்தி வந்தார்.

நேற்று இரவு, கடையை மூடிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சரண்யாவை வழியில் தாக்கினர். கழுத்து மற்றும் தலையின் பின்புறத்தில் ஏற்பட்ட கடும் வெட்டுகளால், அவரது தலையே துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

சரண்யா, மதுரை பாஜகவில் மகளிர் அணியில் நிர்வாகியாக இருந்த நிலையில் தற்போது எந்த அரசியல் பொறுப்பிலும் இல்லாதவராக இருந்துள்ளார்.

வழக்கமாக மக்கள் நெருங்கிய பகுதியான இந்த இடத்தில், இத்தகைய கொலை சம்பவம் நடைபெறுதல், பொதுமக்களில் மிகுந்த பயத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிக்க  கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும்: தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் சங்கம்...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *