Thursday, October 30

தமிழகத்தில் ஜமாஅத்தே இஸ்லாமி மகளிர் அணியினரின் மது, போதைவிலக்கு விழிப்புணர்வு பிரச்சாரம்…

தமிழகத்தில் இளைஞர்கள் அதிகளவில் மது அருந்துவது, போதை பொருட்கள் உட்கொள்வது, ஆபாச செயல்களில் ஈடுபடுவது போன்றவற்றால் பெண்கள் மட்டுமின்றி சமூகத்திலும் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதன் மீது பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தி மகளிர் அணி சார்பாக, செப்டம்பர் மாதம் முழுவதும் மாபெரும் விழிப்புணர்வு பரப்புரை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

தமிழகத்தில் ஜமாஅத்தே இஸ்லாமி மகளிர் அணியினரின் மது, போதைவிலக்கு விழிப்புணர்வு பிரச்சாரம்...
இதற்கான லோகோ வெளியீட்டு விழா இன்று கோவையில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தின் போது பொதுக்கூட்டங்கள், நோட்டீஸ் வினியோகம், இல்லங்களுக்கு சென்று தனிநபர் சந்திப்பு, மனித சங்கிலி, சமூக வலைதள பிரச்சாரம், பள்ளி மற்றும் கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், ஆசிரியர்களுக்கான கலந்துரையாடல் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன.

மேலும், இவ்விழிப்புணர்வு பிரச்சாரம் மூலம் அனைவரும் திருந்தி, மது மற்றும் போதைப்பொருள்களின் தீமைகளை இளைஞர்களுக்கு எடுத்துரைப்பதற்கு வழிவகுக்கும் என்று ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தி மகளிர் அணி உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிக்க  ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரிப்பு...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *