Wednesday, January 15

கோவை மருதமலை அடிவாரப் பகுதியில் உள்ள வீட்டின் முன்பு உள்ள தண்ணீர் தொட்டியில் தண்ணீர் குடிக்கும் யானை கூட்டம் – செல்போன் வீடியோ வைரல்.

 


கோவை மாவட்டம் மருதமலை மற்றும் கெம்பனூர் பகுதியில் சுமார் 10 காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளன. அண்மையில் தடாகம் வனப் பகுதியில் இருந்து மருதமலை வனப் பகுதிக்குள் வந்த இந்த யானை கூட்டம் விவசாய பயிர்களை சேதப்படுத்துவதாக அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். மேலும் இந்த காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து வீடுகளை உடைத்து அரிசி புண்ணாக்கு, உள்ளிட்ட உணவு பொருட்களை தேடுவதால் மனித விலங்கு மோதல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், அப்பகுதி மக்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் இன்று அதிகாலை 5 மணி அளவில் மருதமலை அடிவாரம் ஐ.ஓ.பி காலனி குடியிருப்பு பகுதிக்குள் இந்த யானை கூட்டம்  புகுந்தது. இது குறித்து வனத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அங்கு வந்த வனத் துறையினர் யானை கூட்டத்தை மருதமலை வனப் பகுதிக்குள் விரட்டினர். 10 யானைகளும் குடியிருப்பு பகுதிக்குள் உலா வருவதை அங்கு இருந்தவர்கள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர். தற்போது அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இதையும் படிக்க  மகிஷாசுரன் வதம் நிகழ்ச்சி பொள்ளாச்சியில் சிறப்பாக நடைபெற்றது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *