Thursday, October 30

கஞ்சாவுடன் பிறந்த நாள் கொண்டாடிய சிறுவன் உட்பட 4 பேர் கைது…

புதுச்சேரி வில்லியனுார் அடுத்த கணுவாப்பேட்டை புதுநகர் பகுதியில் இளைஞர்கள் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன்பேரில் நேற்று முன்தினம் இரவு சப் இன்ஸ்பெக்டர் சரண்யா தலைமையிலான போலீசார் கணுவாப்பேட்டை புதுநகர் பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். போலீசாரை கண்டதும் ஒரு கும்பல் தப்பியோட முயன்றது.

கஞ்சாவுடன் பிறந்த நாள் கொண்டாடிய சிறுவன் உட்பட 4 பேர் கைது...
இதில் நான்கு பேரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். விசாரணையில் அவர்கள், ஆத்துவாய்க்கால்பேட் ஆரோக்கியநாதன்,18; சாமியார்தோம்பு சிவா,20; புதுநகர் விஷ்வா,20 ; மற்றும் சென்னையைச் சேர்ந்த 17 வயது சிறுவன் என தெரிய வந்தது.

ஆரோக்கியநாதன், சென்னை கோயம்பேட்டை சேர்ந்த 17 வயது சிறுவன் மூலம் அங்கிருந்து கஞ்சா வாங்கி வந்து, பிறந்தநாள் பார்ட்டியில் நண்பர்களுக்கு கஞ்சா வழங்கி கொண்டாடியது தெரிந்தது.அவர்களிடம் இருந்து 100 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து,சிறுவன் உள்ளிட்ட நான்கு பேர் மீது வழக்குப் பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிக்க  சென்னை மாநகராட்சி பருவ மழையை எதிர்கொள்ள 36 படகுகள் வாங்கியது...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *