ஆனைமலையில் தடை செய்யப்பட்ட 25 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; ஒருவர் கைது

IMG 20240919 WA0046 - ஆனைமலையில் தடை செய்யப்பட்ட 25 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; ஒருவர் கைது

ஆனைமலையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டாரங்களில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் விற்பனையை தடுக்கும் நடவடிக்கையாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் போலீசார் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர்.

இந்தப் பின்னணியில், ஆனைமலை பகுதியில் உதவி ஆய்வாளர் முருகநாதன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சுள்ளிமேடு பதி பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த இடத்தில் சோதனை மேற்கொண்ட போலீசார், 25 கிலோ அளவிலான தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இந்தச் சம்பவத்தில், ஆனைமலையைச் சேர்ந்த ஜான் என்பவரை கைது செய்த போலீசார், மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிக்க  “சென்னைக்கு கொண்டு வரப்பட்ட சுகாதாரமற்ற 1½ டன் ஆட்டு இறைச்சி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *