ஆனைமலையில் தடை செய்யப்பட்ட 25 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; ஒருவர் கைது

ஆனைமலையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டாரங்களில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் விற்பனையை தடுக்கும் நடவடிக்கையாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் போலீசார் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர்.

இந்தப் பின்னணியில், ஆனைமலை பகுதியில் உதவி ஆய்வாளர் முருகநாதன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சுள்ளிமேடு பதி பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த இடத்தில் சோதனை மேற்கொண்ட போலீசார், 25 கிலோ அளவிலான தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இந்தச் சம்பவத்தில், ஆனைமலையைச் சேர்ந்த ஜான் என்பவரை கைது செய்த போலீசார், மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிக்க  சூலூரில் ராணுவ தளவாட கண்காட்சி தொடங்கி வைத்த ஆளுநர்...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கோவையில் ஜீவன்ஸ் பள்ளியில் 2024 - க்கான சான்றிதழ் வழங்கும் விழா...

Fri Sep 20 , 2024
கோவை கரும்புக்கடை பகுதியில் உள்ள ஜீவன்ஸ் பள்ளியில் 2024 கல்வியாண்டிற்கான சிறந்த மாணவ மாணவியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே எஸ் மஸ்தான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ மாணவிர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார். உடன்,ஜீவன்ஸ் கல்வி அறக்கட்டளை ஜீவன்ஸ் பள்ளி மற்றும் குழுமங்கள் சேர்மன் என் அப்துல் அஜீஸ் ,தமிழ்நாடு சிறுபான்மை உறுப்பினர், […]
IMG 20240919 WA0028 - கோவையில் ஜீவன்ஸ் பள்ளியில் 2024 - க்கான சான்றிதழ் வழங்கும் விழா...

You May Like