Wednesday, September 10

பாலம் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து 2 இளைஞர்கள் உயிரிழப்பு…

மதுரை மாவட்டம் திருமங்கலம் முதல் விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன் கோவில் வரை அமைக்கப்பட்ட நான்கு வழிச் சாலை பணிகள் முடிந்த நிலையில், தற்போது பாலங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்தப் பணி நடந்துகொண்டிருந்தபோது, நத்தம்பட்டி அருகே அர்ஜுனா நதியில் கட்டப்பட்டுவரும் பாலத்தின் பணிக்காக சென்ற தொழிலாளர்கள், பள்ளத்தில் 2 பேர் பைக்குடன் இறந்து கிடப்பதை கண்டு போலீஸாருக்கு தகவல் அளித்தனர்.

நத்தம்பட்டி போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து, 2 பேர் உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். உயிரிழந்தவர்களை தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் (20) மற்றும் கிருஷ்ணமூர்த்தி (19) என அடையாளம் காணப்பட்டது.

இவ்விருவரும் சிவகாசியில் உள்ள உறவினர் வீட்டில் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தேனியில் இருந்து பைக்கில் புறப்பட்டனர். அவர்கள் நத்தம்பட்டி அருகே உள்ள அர்ஜுனா நதியில் கட்டப்பட்டுவரும் பாலத்திற்காக தோண்டிய பள்ளத்தில் பைக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது என போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதையும் படிக்க  ஆழியாறு அணையில் இருந்து1,006 கன அடி தண்ணீர் திறப்பு கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *