மாற்றுத்திறனாளிகளுக்கான ரயில்வே சலுகை அடையாள அட்டைகள்…
மாற்றுத்திறனாளி பயணிகளுக்கான ரயில்வே சலுகை அடையாள அட்டைகளை ஆன்லைனில் பெறவும் புதுப்பிக்கவும் இந்திய ரயில்வே புதிய டிஜிட்டல் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் பயணிகள் இனி ரயில்வே அலுவலகங்களை நேரில் சென்று வருவதற்கான தேவையின்றி சேவைகளை விரைவாக பெற முடியும்.ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை:
மாற்றுத்திறனாளி பயணிகள் https://divyangjanid.indianrail.gov.in இணையதளத்தின் மூலம் புதிய சலுகை அட்டைகளுக்காக விண்ணப்பிக்கலாம் அல்லது தற்போதைய அட்டைகளை புதுப்பிக்கலாம்.சலுகைக்கான தகுதிகள்:
திவ்யங்ஜன் (Divyangjan Card) சலுகையைப் பெறுவதற்காக விண்ணப்பிக்கத் தகுதியான பயணிகள் வருமாறு:1. பார்வை குறைபாடு: பார்வை இல்லாதவர்கள் அல்லது பார்வை குறைவுடையவர்கள்.2. மனநலம் பாதிப்பு: துணையின் உதவியின்றி பயணிக்க முடியாதவர்கள்.3. செவித் திறன் மற்றும் பேச்சு குறைபாடு: செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடு ஒரே நபருக...