மாற்றுத்திறனாளிகளுக்கான ரயில்வே சலுகை அடையாள அட்டைகள்…

மாற்றுத்திறனாளி பயணிகளுக்கான ரயில்வே சலுகை அடையாள அட்டைகளை ஆன்லைனில் பெறவும் புதுப்பிக்கவும் இந்திய ரயில்வே புதிய டிஜிட்டல் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் பயணிகள் இனி ரயில்வே அலுவலகங்களை நேரில் சென்று வருவதற்கான தேவையின்றி சேவைகளை விரைவாக பெற முடியும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை:

மாற்றுத்திறனாளி பயணிகள் https://divyangjanid.indianrail.gov.in இணையதளத்தின் மூலம் புதிய சலுகை அட்டைகளுக்காக விண்ணப்பிக்கலாம் அல்லது தற்போதைய அட்டைகளை புதுப்பிக்கலாம்.

சலுகைக்கான தகுதிகள்:

திவ்யங்ஜன் (Divyangjan Card) சலுகையைப் பெறுவதற்காக விண்ணப்பிக்கத் தகுதியான பயணிகள் வருமாறு:

1. பார்வை குறைபாடு: பார்வை இல்லாதவர்கள் அல்லது பார்வை குறைவுடையவர்கள்.

2. மனநலம் பாதிப்பு: துணையின் உதவியின்றி பயணிக்க முடியாதவர்கள்.

3. செவித் திறன் மற்றும் பேச்சு குறைபாடு: செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடு ஒரே நபருக்கு இருந்தால்.

4. எலும்பியல் ஊனமுற்றோர்: முடக்கவாதம், மற்ற உடல் முடங்கல் அல்லது பாதுகாவலரின் உதவியின்றி பயணிக்க முடியாதவர்கள்.

இந்த புதிய நடவடிக்கை மாற்றுத்திறனாளி பயணிகளின் சலுகை செயல்முறையை எளிமையாக்கும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க  பிரதமர் மோடிக்கு  கொலை மிரட்டல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

துணை முதல்வர் பிறந்த நாள் கொண்டாட்டம்...

Wed Nov 27 , 2024
பொள்ளாச்சி அடுத்த புளியம்பட்டியில் துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளை முன்னிட்டு ஒன்றிய கழகச் செயலாளர் வே. மருதவேல் தலைமையில் கேக் வெட்டி, நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம் பொள்ளாச்சி வடக்கு – கிழக்கு ஒன்றியம் புளியம்பட்டி ஊராட்சியில் உள்ள பஞ்சாயத்து அலுவலகம் முன்பு தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவை கொண்டாடும் வகையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்டங்கள் மற்றும் கிரிக்கெட் […]
IMG 20241127 WA0036 | துணை முதல்வர் பிறந்த நாள் கொண்டாட்டம்...