Sunday, December 22

Tag: rain

தமிழகத்தில் அதிகனமழை: 2229 நிவாரண முகாம்கள்  தயார் நிலை..

தமிழகத்தில் அதிகனமழை: 2229 நிவாரண முகாம்கள்  தயார் நிலை..

தமிழ்நாடு
வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், 2229 நிவாரண முகாம்கள் தயாராக உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின் படி, 30.11.2024 அன்று பிற்பகலில் காரைக்கால் மற்றும் மகாபலிபுரத்திற்கு இடையே மணிக்கு 70 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எதிர்வு கூறியுள்ளது.முதல்வர் மு.க. ஸ்டாலின், கனமழையை எதிர்கொள்ள தேவையான அனைத்து ஆயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், நிலைமையை தொடர்ந்து கண்காணிக்குமாறும் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.ரெட் அலர்ட்இன்று (29.11.2024):20 செ.மீட்டருக்கு மேலாக கனமழை: செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாருர், நாகப்பட்டினம்.10 செ.மீட்டருக்கு மேலாக மிககனமழை: சென்னை, திருவள்ளூர...