ஜெயிலர் 2: ரஜினிகாந்த் பிறந்த நாளில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு?
நெல்சன் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படம், உலகளாவிய அளவில் ரூ. 650 கோடிக்கு மேல் வசூல் செய்ததுடன், மிகப் பெரிய வெற்றியையும் சாதனையையும் பெற்றது.ஜெயிலர் வெற்றியைத் தொடர்ந்து, தயாரிப்பாளர் கலாநிதி மாறன், நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு தனித்தனியாக காசோலைகள் மற்றும் சொகுசு கார்களை பரிசளித்தார். மேலும், படக்குழுவினருக்கு தங்க நாணயங்களை பரிசாக வழங்கி வாழ்த்தினார்.ஜெயிலர் படத்திற்குப் பிறகு, ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். அதற்குப் பிறகு, இயக்குநர் நெல்சனுடன் இணைந்து ஜெயிலர் 2 படத்தில் நடிக்கவுள்ளார் எனக் கூறப்படுகிறது.சென்னையில் ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு விடியோவுக்கான செட் பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளிய...