ஜெயிலர் 2: ரஜினிகாந்த் பிறந்த நாளில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு?

நெல்சன் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படம், உலகளாவிய அளவில் ரூ. 650 கோடிக்கு மேல் வசூல் செய்ததுடன், மிகப் பெரிய வெற்றியையும் சாதனையையும் பெற்றது.

ஜெயிலர் வெற்றியைத் தொடர்ந்து, தயாரிப்பாளர் கலாநிதி மாறன், நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு தனித்தனியாக காசோலைகள் மற்றும் சொகுசு கார்களை பரிசளித்தார். மேலும், படக்குழுவினருக்கு தங்க நாணயங்களை பரிசாக வழங்கி வாழ்த்தினார்.

ஜெயிலர் படத்திற்குப் பிறகு, ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். அதற்குப் பிறகு, இயக்குநர் நெல்சனுடன் இணைந்து ஜெயிலர் 2 படத்தில் நடிக்கவுள்ளார் எனக் கூறப்படுகிறது.

சென்னையில் ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு விடியோவுக்கான செட் பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த அறிவிப்பு, ரஜினிகாந்தின் பிறந்த நாளான டிசம்பர் 12ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க  மக்களவைத் தேர்தலில் நடிகர் அஜித் வாக்களித்தார்...

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

திருமணத்திற்காக சேர்த்து வைத்த 150 பவுன் கொள்ளை சம்பவத்தில் இருவர் கைது

Thu Nov 28 , 2024
தேவகோட்டை  ராம் நகர் ஆறாவது வீதியில் வசித்து வருபவர் சஞ்சீவி ஞானசேகர் தேவகோட்டையில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் பள்ளியில்ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி வெளியூரில் ஆசிரியராகவும், மகள் தபால் நிலைய ஊழியராகவும் பணி புரிந்து வரும் நிலையில், கடந்த இருபதாம் தேதி மூவரும் வீட்டை பூட்டிவிட்டு பணிக்கு சென்றுள்ளனர். தபால் அலுவலகத்தில் பணி முடிந்து மூன்று மணி அளவில் வீட்டிற்கு வந்த போது, வீட்டின் முன்பக்க […]
IMG 20241128 134548 | திருமணத்திற்காக சேர்த்து வைத்த 150 பவுன் கொள்ளை சம்பவத்தில் இருவர் கைது