

கோவை, சுந்தராபுரம் பகுதியில் MSD TURF இல் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வழிகாட்டுதலின் படி மாவட்ட இதயதெய்வம் அம்மா பேரவை செயலாளர் ஜெயசிம்மன் தலைமையில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் S.R.A செந்தில் மற்றும் முன்னால் சட்டமன்ற உறுப்பினர் கழக அமைப்புச் செயலாளர் மா.ப. ரோகிணி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் வெற்றி பெற்ற நான்கு அணிகளுக்கு கோப்பைகள் மற்றும் ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டது.இதில் முன்னால் அமைச்சர் சண்முகவேலு, டேவிட் அண்ணா துறை, கே. சுகுமார் Ex.MP., மற்றும் N.R. அப்பாதுரை , P. சரவணன் , P. பாஸ்கரன், S.R. சதிஸ்குமார் ஆகியோர் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கினர். இதில் மாநில அம்மா பேரவை துணைத்தலைவர்கள், இளைஞரணி துணைத்தலைவர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், பகுதி, ஒன்றியம், நகரம், பேரூராட்சி கழக செயலாளர்கள், ஒருங்கிணைந்த மாவட்ட அம்மா பேரவை செயலாளர்கள், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள், வட்ட கழக செயலாளர்கள் மற்றும் கழக முன்னோடிகள் பலர் கலந்துகொண்டனர்.