
கோவை மாவட்டம் ஆர் எஸ் புரம் பகுதி வாஸன் கண் மருத்துவமனையானது எய்ம்ஸ் தரத்தில் தரம் உயர்த்தப்பட்டு உலகத் தரமான மருத்துவர்கள் மற்றும் அதிநவீன மருத்துவ கருவிகளுடன் கூடிய மருத்துவ சேவையை புதுப்பொழிவுடன் துவக்க விழா
வாஸன் கண் மருத்துவமனை மருத்துவ இயக்குனரும்
கண் விழித்திரை அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் எய்ம்ஸில் தங்கப் பதக்கம் பெற்ற அனுஷா வெங்கட்ராமன் தலைமையில் நடைபெற்றது….


துவக்க விழாவில் கண் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜெயமணிகண்டன், குழந்தைகள் நல கண் சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜகா ஜனனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்…
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கே.ஜி மருத்துவ மனையின் நிறுவனர் பத்மஸ்ரீ டாக்டர் பக்தவத்சலம், பெங்களூர் ஐ.எஸ். ஆர்.ஓ திட்ட இயக்குநர் தேன்மொழி செல்வி, விமான படைத்தளபதி விகாஸ் வாஹி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து
கொண்டு குத்துவிளக்கேற்றி வாஸன் கண் மருத்துவ மனையின் புதிய சேவையை துவக்கி வைத்தனர்…
இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக கொண்ட துணை ஆணையர் மற்றும் துணை ஆட்சியருமான துரைமுருகன், ஆர் எஸ் புரம் சரக காவல்துறை துணை ஆணையர் செல்லதுரை, கோவை இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர் மகேஸ்வரன் கோவை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில் அண்ணா, ராஜஸ்தானி சங்கத் தலைவர் கௌதம் சந்த் ஸ்ரீஸ்ரீமல் ஆகியோருக்கு வாசன் கண் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் சால்வை அணிவித்து கேடயங்கள் வழங்கி சிறப்பித்தனர்….
இந்நிகழ்ச்சியில் கேஜி மருத்துவமனை
நிறுவனர் கூறுகையில் வாசன் கண் மருத்துவ மனை சிறப்பாக செயல்படுகின்றது… அனுசா வெங்கட்ராமன் மருத்துவ மனையை சிறப்பாக வழிநடத்துகிறார். மேலும் கோவை மாவட்டத்தில் பல்வேறு கண் பரிசோதனை முகாம்கள் அமைத்து பொதுமக்களுக்கு சிறப்பான முறையில் சேவே செய்து வருகின்றார் அவருக்கு எனது வாழ்த்துக்கள் என்று பேசினார்…
துவக்க விழாவில் அரசியல் பிரமுகர்கள் முக்கிய பிரமுகர்கள், மருத்துவர்கள்,வாஸன் கண் மருத்துவமனையின் நிர்வாகிகள், செவிலியர்கள் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்…