கோவையில் மாநில அளவிலான தடகள போட்டி…

கோவையில் இரண்டு நாட்கள் நடைபெற்ற மாவட்ட அளவிலான தடகள போட்டி சிறப்பாக நிறைவு பெற்றது. இந்த போட்டி, கோவை மாவட்ட தடகள சங்கத்தின் சார்பில் 63வது மாவட்ட அளவிலான ஜூனியர் மற்றும் சீனியர் தடகள போட்டி மற்றும் 8வது மயில்சாமி மற்றும் 3வது சங்கரன் நினைவுகோப்பை நிகழ்ச்சியாக, கோவை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

img 20240829 wa00524785986336201164809 - கோவையில் மாநில அளவிலான தடகள போட்டி...

இந்த போட்டியில் பள்ளி, கல்லூரி மற்றும் தனியார் விளையாட்டு சங்கங்களைச் சேர்ந்த 1800-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன.

img 20240829 wa00551634269791434776336 - கோவையில் மாநில அளவிலான தடகள போட்டி...

மாணவர்கள் பிரிவில், ஜெனிஷிஸ் ஸ்போர்ட்ஸ் ஃபவுண்டேசன் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற்றது, மற்றும் மாணவியர் பிரிவில் யுனிக் ஸ்போர்ட்ஸ் அகாடமி சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது.

img 20240829 wa00536212297230419830226 - கோவையில் மாநில அளவிலான தடகள போட்டி...

மேலும் சீனியர் ஆண்கள் பிரிவில் மேற்கு மண்டல காவல் துறை அணி சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது, பெண்கள் பிரிவில் யுனிக் ஸ்போர்ட்ஸ் அகாடமி சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு அத்லெடிக் சங்க தலைவர் வால்டர் தேவாரம் கோப்பைகள் வழங்கினார்.

இதையும் படிக்க  கேமராமேன் காயம்-ரிஷப் பந்த் மன்னிப்பு

இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்ட தடகள தொழில்நுட்ப வல்லுநர் சீனிவாசன் மற்றும் கோவை மாவட்ட தடகள சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பொள்ளாச்சியில் பாதாள சாக்கடை கழிவு நீரால் பொதுமக்கள் அவதி

Fri Aug 30 , 2024
பொள்ளாச்சியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்பட்டது நகரம் முழுவதும் உள்ள 36 வார்டுகளிலும் உள்ள குடியிருப்புகள் வணிக வளாகங்கள் திருமண மண்டபங்கள் உணவகங்கள் தங்கும் விடுதிகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு இனைப்புகள் கொடுக்கப்பட்டு கழிவு நீர் குழாய் மூலம் கொண்டு செல்லப்பட்டு மாட்டு சந்தை வளாகத்தில் அமைக்கப்பட்ட சுத்திகரிப்பு நிலையம் மூலம் சுத்திகரிப்பு செய்யப்பட்டு வெளியேற்றப்படுகிறது. ஆனால் நகரின் ஒரு சில பகுதிகளில் ஆங்காங்கே […]
IMG 20240830 WA0008 - பொள்ளாச்சியில் பாதாள சாக்கடை கழிவு நீரால் பொதுமக்கள் அவதி

You May Like