13 மாநிலங்கள் மாணவ மாணவிகள் பங்கேற்கும் தேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டிகள்.

பொள்ளாச்சி அடுத்த ஆச்சிபட்டி பகுதியில் உள்ள திஷா பள்ளியில் சி.ஐ.எஸ்.சி.இ பள்ளிகளுக்கு இடையிலான தேசிய அளவிலான டேக்வாண்டோ விளையாட்டுப் போட்டிகள் கலை நிகழ்ச்சியுடன் துவங்கியது.

இந்தப் போட்டியில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா,உத்தர பிரதேசம், வெஸ்ட் பெங்கால், ஒடிசா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இருந்து 600 க்கு மேற்பட்ட மாணவி மாணவிகள் கலந்து கொள்கின்றனர்.

WhatsApp Image 2024 09 08 at 9.22.07 AM | 13 மாநிலங்கள் மாணவ மாணவிகள் பங்கேற்கும் தேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டிகள்.
WhatsApp Image 2024 09 08 at 9.22.54 AM | 13 மாநிலங்கள் மாணவ மாணவிகள் பங்கேற்கும் தேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டிகள்.
WhatsApp Image 2024 09 08 at 9.22.45 AM | 13 மாநிலங்கள் மாணவ மாணவிகள் பங்கேற்கும் தேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டிகள்.

டேக்வாண்டோ போட்டி 14,17,19 ஆகிய வயதுகளுக்கு உட்பட்ட மாணவ மாணவிகளுக்கு இடையே மூன்று பிரிவுகளில் நடைபெறுகிறது. இந்த போட்டியானது 8ம் தேதி துவங்கி 9, 10 ஆகிய மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.

இந்த போட்டியின் துவக்க விழா நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் மாநில பள்ளிகளுக்கு இடையே விளையாட்டுப் போட்டியின் ஒருங்கிணைப்பாளர் சார்லஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கொடியேற்றி துவக்கி வைத்தார்

இதில் 13 மாநிலங்களைச் சேர்ந்த மாணவி மாணவிகள் வண்ணமயமான உடைகள் அணிந்து கலந்து கொண்டனர். கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக துவங்கிய நிகழ்ச்சியை பள்ளி மாணவ-மாணவிகள் பெற்றோர்கள் உற்சாகமாக கண்டு ரசித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு வெற்றி விநாயகர் நகரில் கோலாகல கொண்டாட்டம்…

Sun Sep 8 , 2024
கோவை கணபதி மாநகர் வெற்றி விநாயகர் நகரில் உளள் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு வெற்றி விநாயகர் திருக்கோவிலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது… வெற்றி விநாயகர் திருக்கோவிலில் 31 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் 7-ம் ஆண்டு திருத்தேர் விழா மகா அன்னதானப் பெருவிழா வெகு விமர்சியாகவும் பிரம்மாண்டமாகவும் நடைபெற்றது. அதிகாலை 4.30 மணிக்கு பக்தர்கள் தங்கள் திருக்கரங்களினால் சங்கு தீர்த்தம் ஏந்தி வந்து விநாயகருக்கு அபிஷேகம் செய்தனர்… […]
WhatsApp Image 2024 09 08 at 12.20.22 PM | விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு வெற்றி விநாயகர் நகரில் கோலாகல கொண்டாட்டம்…