திருப்பத்தூரில் அருகே மாபெரும் மாட்டு வண்டி எல்லை பந்தயம்…

சிவகங்கை மாவட்டம்  திருப்பத்தூர் அருகே காரையூர் கிராமத்தில் காரையூர் புதுவளவு இளைஞர்கள் மற்றும் கிராமத்தார்கள் மற்றும் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை சார்பாக  மாபெரும் இரட்டைமாட்டு வண்டி எல்லைப் பந்தயம் நடைபெற்றது.
திருப்பத்தூர்- திண்டுக்கல் சாலையில்  பெரிய மாடு, சின்னமாடு என  இரண்டு பிரிவுகளாக பந்தயம் நடைபெற்றது.

img 20241201 wa00371763467302335806007 | திருப்பத்தூரில் அருகே மாபெரும் மாட்டு வண்டி எல்லை பந்தயம்...

சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பெரிய மாட்டு பிரிவில் 22ஜோடிகளும், 2 சுற்றுகளாக நடைபெற்ற சிறிய மாட்டு பிரிவில் 47 ஜோடிகள் என மொத்தம் 69 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. பெரிய மாட்டுக்கு 8 கிலோமீட்டர் தொலைவும், சிறிய மாட்டுக்கு 6 கிலோமீட்டர் தொலைவும் பந்தய எல்லைகளாக நிர்ணயம் செய்யப்பட்டது. சீறி பாய்ந்து சென்ற மாட்டுவண்டி போட்டிகளை சாலையின் இருபுறங்களில் நின்று ஏராளமான பார்வையாளர்கள் உற்சாகப்படுத்தி கண்டுகளித்தனர். 

போட்டியில் வெற்றி பெற்ற மாட்டு வண்டியின் உரிமையாளர்களுக்கும்,  சாரதிகளுக்கும் ரொக்கத் தொகையும்,  பரிசு பொருட்களும் வழங்கப்பட்டது, மேலும் கலந்து கொண்ட அனைத்து மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கபட்டது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை மாநில தலைவர் டாக்டர் ஜி ஆர் கார்த்திக் ராமமூர்த்தி, ஒன்றிய பெருந்தலைவர் சண்முக வடிவேல், மாங்குடி மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் முருகன் மற்றும் விழா குழு நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் இளைஞர்கள் ஆகியோர் செய்து இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

Mon Dec 2 , 2024
கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு இன்று (டிசம்பர் 2) அதிக மழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுத்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வடகடலோர மாவட்டங்களில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்திய ஃபென்ஜால் புயல் கரையைக் கடந்தவுடன், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, மேற்கு – வடமேற்கு திசை நோக்கி நகர்ந்தது.இது மேலும் மேற்கு – வடமேற்கு திசையில் உள்மாவட்டங்கள் நோக்கி நகர்ந்து, டிசம்பர் 2 அன்று ஆழ்ந்த காற்றழுத்த […]
image editor output image 949137350 1733128898640 | கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை