* நேற்று நடைபெற்ற லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான 34ஆவது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த எம்.எஸ்.தோனி 28 ரன்கள் எடுத்திருந்ததன் மூலமாக ஒரு விக்கெட் கீப்பராக 5000 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார். இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் விளையாடினர் சிஎஸ்கே அணியில் ரச்சின் ரவீந்திரா மற்றும் அஜிங்க்யா ரஹானே இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் ரச்சின் ரவீந்திரா கோல்டன் டக் முறையில் ஆட்டமிழந்தார்.
* 15 ஓவர்களில் சிஎஸ்கே 5 விக்கெட்டுகளை இழந்து 105 ரன்கள் எடுத்தது. அடுத்த 2 ஓவர்களில் 18 ரன்கள் எடுக்கப்பட்டு மொத்தமாக 123 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது தான் 18ஆவது ஓவர் வீசுவதற்கு ரவி பிஷ்னோய் களமிறங்கினார். இதில், மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர்கள் பறக்கவிட்டார். அவர் 21 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து வெளியேறினார். இந்த ஓவர் தான் போட்டியில் திருப்பு முனையை ஏற்படுத்தியது. அடுத்து தோனி களமிறங்கினர். அந்த ஓவரில் மட்டும் 2 வைடு, 4, 6, 1, 0, 1, வைடு, 0 என்று மொத்தமாக 15 ரன்கள் எடுக்கப்பட்டது. கடைசி பந்தில் பவுண்டரியும் விளாசவே சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 176 ரன்கள் எடுத்தது. இதில், தோனி 9 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.இந்த நிலையில் தான் இந்தப் போட்டியின் மூலமாக தோனி ஒரு விக்கெட் கீப்பராக 5000 ரன்களை கடந்து புதிய சாதனையை படைத்துள்ளார். ஒரு விக்கெட் கீப்பராக 5000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை தனது 42ஆவது வயதில் தோனி படைத்துள்ளார்.
*ஆர்சிபி விக்கெட் கீப்பரான தினேஷ் கார்த்திக் 4369 ரன்களுடன் 2ஆவது இடத்தில் இருக்கிறார். ஒவ்வொரு போட்டியிலும் கடைசியில் களமிறங்கி விளையாடி வருகிறார். . இந்த சீசனில் தோனி விளையாடிய 5 போட்டிகளில் வரிசையாக 37, 1, 1, 20, 28 என்று மொத்தமாக 34 பந்துகளில் 87 ரன்கள் எடுத்துள்ளார். இதில், 7 பவுண்டரி, 8 சிக்ஸர் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.