கடலூர் நவநீத நகரை சேர்ந்தவர் பத்மநாபன் (43) அதிமுகவில் வார்டு செயலாளராக இருந்தார் இவர் இன்று காலை தனது சொந்தப் பணிக்காக புதுச்சேரி கடலூர் எல்லைப் பகுதியில் உள்ள பாகூர் இளஞ்சந்தை அருகே வந்தபோது இரு சக்கர வாகனத்தில் வந்த ஐந்து பேர் கொண்ட மர்ம நபர்கள் அவரை சராமாறியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடி விட்டனர், இது தொடர்பாக பாகூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் அவர் மீது கடலூர் திருப்பாப்புலியூர் காவல் நிலையத்தில் கொலை உட்பட ஐந்து வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.