Wednesday, February 5

மீனவர்களுக்கு நலத்திட்ட உதவிகள்: முன்னாள் MLA நந்தா.சரவணன் வழங்கினார்!

முத்தியால்பேட்டை தொகுதி திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நந்தா. சரவணன், தனது சொந்த நிதியில் தொகுதி முழுவதும் பல்வேறு வளர்ச்சி பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக, இன்று முத்தியால்பேட்டை சோலை நகர் வடக்கு பகுதியைச் சேர்ந்த 31 மீனவ பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில், மீனவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், மீன்பிடி வலைகள் உள்ளிட்ட சாதனங்கள் இலவசமாக வழங்கப்பட்டன.

இந்த நலத்திட்ட உதவிகளை திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நந்தா. சரவணன் நேரடியாக வழங்கினார். நிகழ்வில், முத்தியால்பேட்டை தொகுதி முன்னாள் மீனவர் அணி துணை செயலாளர் பூபதி கிருஷ்ணன், தேசப்பன் பாவாடை, எ. வேல்முருகன், மணிபாலன், நடராஜன் உள்ளிட்ட பல திமுக நிர்வாகிகள் மற்றும் தொகுதி முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.


இதையும் படிக்க  பெண் புகைப்படங்களை திருடி மிரட்டிய நபர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *