
புதுச்சேரி லாஸ்பேட்டை சேர்ந்த ராஜேஷ் குமார், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கனடா வேலை வாய்ப்புக்காக இணைய வழி மோசடியில் சிக்கி 17 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் இழந்தார். அந்த சம்பந்தமான புகாரின் பேரில், இணைய வழி போலீசார் விசாரித்து பெங்களூர் மற்றும் பிஹாரைச் சேர்ந்த நான்கு நபர்களை கைது செய்து, 65 கோடி ரூபாய்க்கு மேல் இந்தியா முழுவதும் 3000க்கும் மேற்பட்ட நபர்களை கனடா நாட்டிற்கு அனுப்பி மோசடி செய்ததாக கண்டுபிடித்தனர்.
அந்த வழியில், ராஜேஷ் குமாருக்கு இழந்த 17 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பணம் மீட்டுக் கொடுக்கப்பட்டது. இதனால், காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்துப் புதுச்சேரியில் நேற்று அவர் இணைய வழி காவல் நிலையத்திற்கு சென்று ஆய்வாளர்கள் தியாகராஜன், கீர்த்தி மற்றும் தலைமை காவலர் மணிமொழி ஆகியோர்களுக்கு சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தார்.