
மணவெளி சட்டமன்ற தொகுதி நோணாங்குப்பம் பகுதியின் தண்ணீர் தொட்டி தெருவில் உள்ள வடிகால் வாய்க்காலுக்கு புதிய கான்கிரீட் கட்டுமான பணிக்கான பூமி பூஜை இன்று (10.01.2025) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி, 20 ஆண்டுகளுக்கு மேலாக அப்பகுதி மக்களின் கோரிக்கையை பூர்த்தி செய்யும் வகையில், தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் சட்டப்பேரவைத் தலைவருமான திரு செல்வம் ஆர் தலைமையில் நடைப்பெற்றது.
பொதுப்பணித்துறை நீர்ப்பாசன கோட்டம் மூலம் ரூ.18.50 லட்சம் மதிப்பில் புதிய கான்கிரீட் வாய்க்கால் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதன் அடிப்படையில், இவ்விழாவில், சட்டப்பேரவை தலைவர் திரு செல்வம் ஆர் தலைமையில் பூமி பூஜை நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை நீர்ப்பாசன கோட்ட உதவி பொறியாளர் மதிவாணன், இளநிலை பொறியாளர்கள் சங்கர், பிரித்திவிராஜ் மற்றும் அப்பகுதியின் முக்கிய பிரமுகர்கள் பூபாலன், சுமதி, குமரன், ராஜு, சுரேஷ், கலையரசன், அனிதா, அன்பு, என் எஸ் கே செழியன், கலைவாணன் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனர்.