![பரிக்கல் பட்டு பள்ளியில் தற்காப்பு கலை பயிற்சி முகாமின் நிறைவு விழா<br><br> பரிக்கல் பட்டு பள்ளியில் தற்காப்பு கலை பயிற்சி முகாமின் நிறைவு விழா<br><br>](https://thenewsoutlook.com/wp-content/uploads/2025/02/IMG-20250203-WA0060-1024x515.jpg)
புதுவை மாநிலம், பரிக்கல் பட்டு அரசு உயர்நிலைப்பள்ளியில், பள்ளி மாணவிகளுக்கான மூன்று மாத சிறப்பு தற்காப்பு கலை பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது. பள்ளிக்கல்வித்துறை இந்த பயிற்சி முகாமை ஏற்பாடு செய்தது. இதில் ஏராளமான மாணவிகள் பயிற்சி பெற்று பலனடைந்தனர்.
இந்த பயிற்சி முகாம் நிறைவு விழா இன்று பரிக்கல் பட்டு அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் தலைமை தாங்கியுள்ள புதுவை மாநில தற்காப்பு கலை சங்க இணைச் செயலாளர் பாலச்சந்தர், தலைமை ஆசிரியர் முத்துகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். அகில இந்திய கராத்தே சங்கத் தலைவர் கராத்தே வளவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பயிற்சி முடித்த மாணவிகளுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பெருமிதம் செய்தார்.
கௌரவ விருந்தினர்களாக கார்த்திகேயன் பட்டதாரி ஆசிரியர், ஸ்ரீ அரிவாம் பலம் பட்டதாரி ஆசிரியை, ஆண்டனி ராக் சத்யா உடற்கல்வி ஆசிரியர், அரியூர் செல்வம், பாகூர் தீயணைப்பு துறை, ஐயப்பன் பாகூர் கொம்யூன் விளையாட்டு வீரர்கள் நல சங்க நிர்வாகி ஆகியோர் கலந்து கொண்டனர்.
பயிற்சியாளர் நீலவேணி, அனைவருக்கும் நன்றி கூறி, மாணவிகளுக்கு பயிற்சி அளித்ததற்கான அறியமான நன்றி தெரிவித்தார்.