Thursday, October 30

பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் தமிழக வெற்றிக்கழக மாநாடா?

திருச்சி பொன்மலை ஜி கார்னர் ரயில்வே மைதானத்தில் தமிழக வெற்றிக்கழகத்தின் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மைதானம் 8 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதற்கு அனுமதி கோரி, ரயில்வே கோட்ட மேலாளரிடம் மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அந்த மனுவில் குறிப்பிட்ட தேதியில்லாததால், ரயில்வே துறை சார்பில் அந்த மாநாட்டிற்கான சரியான தேதியை குறிப்பிடும்படி கட்சியை அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், மைதானத்தின் பரப்பளவு மிகச்சிறியது என்பதால், கூட்டத்தை கட்டுப்படுத்துவது கடினமாக இருக்கும், அதனால் இங்கு மாநாடு நடத்த வாய்ப்புகள் குறைவாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் பின், பல்வேறு மாவட்டங்களில் மாநாடு நடத்தும் இடங்களை கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் பார்வையிட்டிருப்பதாகவும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் கட்சி தலைமையிலிருந்து வெளியிடப்படும் என திருச்சி மாவட்ட நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

இதையும் படிக்க  2026க்கு பிறகு அம்மாவின் கட்சி இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும்- தஞ்சையில் டிடிவி.தினகரன் தஞ்சையில் பேட்டி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *