தேர்தல்:பொதுமக்கள் வாக்களிப்பதற்கு சிறப்பு ரயில்…

1652202399 0885 - தேர்தல்:பொதுமக்கள் வாக்களிப்பதற்கு சிறப்பு ரயில்...

* நாடாளுமன்றத் தேர்தலில் பொதுமக்கள் வாக்களிப்பதற்கு வசதியாக சிறப்பு ரயில்களை இயக்குகிறது தெற்கு ரயில்வே. தாம்பரம் – திருநெல்வேலி இடையே ராஜபாளையம், தென்காசி வழியாக கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி தாம்பரம் – திருநெல்வேலி சிறப்பு ரயில் (06089) ஏப்ரல் 20 அன்று தாம்பரத்தில் இருந்து இரவு 09.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.15 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.

* மறுமார்க்கத்தில் திருநெல்வேலி – தாம்பரம் சிறப்பு ரயில் (06090) ஏப்ரல் 21 அன்று திருநெல்வேலியில் இருந்து மாலை 03.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 04.55 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்.  இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *