நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஈரோடு இடைத்தேர்தலில் தனது கட்சி நிச்சயமாக தனித்துப் போட்டியிடும் என அறிவித்துள்ளார்.
திருச்சியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சீமான் கூறியதாவது:
தமிழகத்தில் நீதிமன்றங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள் போன்ற முக்கிய இடங்களிலும் கொலைகள் நடைபெறும் நிலை உள்ளது. அனைத்து தரப்பினரும் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர். ஆசிரியர்கள், செவிலியர்கள், விவசாயிகள், மீனவர்கள், மாணவர்கள் என பலர் போராடும் சூழலை அரசாங்கம் உருவாக்கியுள்ளது. ஆனால், அதனை மறைத்து, சிறந்த ஆட்சி தருவதாக அரசுகள் கூறுகின்றன.
தமிழர்களின் அடையாளங்களை மறைத்து, பேருந்து நிலையங்கள் மற்றும் நூலகங்களுக்கு கருணாநிதியின் பெயரை சூட்டுவது தேவையற்றது.
அமலாக்கத்துறையின் சோதனைக்குப் பயந்து, திமுக மற்றும் அதிமுக கூட்டங்களில் பாஜகவுக்கு எதிராக கண்டன தீர்மானங்கள் நிறைவேற்றப்படவில்லை.
“நடிகர் விஜய் எனது தம்பி, ஆனால் திமுக எனது எதிரி. ஈரோடு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும்” என சீமான் உறுதியாக தெரிவித்தார்.