Tuesday, October 28

முரசொலி மாறன் பிறந்த நாளையொட்டி திருச்சி அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை…

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் அவர்களின் 91வது பிறந்தநாளை முன்னிட்டு, திருச்சி தில்லைநகரில் உள்ள திமுக மாவட்ட அலுவலகத்தில் மரியாதை நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில், திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே. என். நேரு தலைமையில், திமுகவினர் முரசொலி மாறனின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

நிகழ்வில், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துறை வைகோ, மாநகர செயலாளரும், மாநகர மேயருமான அன்பழகன், மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி உள்ளிட்ட திமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

முரசொலி மாறன் பிறந்த நாளையொட்டி திருச்சி அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை...

திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் முரசொலி மாறன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில், தெற்கு மாவட்ட கழக செயலாளரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், மாநகரக் கழகச் செயலாளர் மு. மதிவாணன் முன்னிலையில் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.முரசொலி மாறன் பிறந்த நாளையொட்டி திருச்சி அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை...முரசொலி மாறன் பிறந்த நாளையொட்டி திருச்சி அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை...

இதையும் படிக்க  Unknown bomb blast made people on fire and tears on eyes

இந்நிகழ்வில், மாவட்ட பகுதி கழக நிர்வாகிகள் வண்ணை அரங்கநாதன், சேகரன், சபியுல்லா, செந்தில், மோகன் ஆகியோருடன் அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *