இந்திரா காந்தியிடம் இருந்து வீரம், துணிவு, மன உறுதி ஆகியவற்றை பிரதமரான மோடி கற்க வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். மக்களவைத் தோ்தலின் நான்காம் கட்ட வாக்குப்பதிவு மே 13-ஆம் தேதி நடைபெற உள்ளது. மகாராஷ்டிர மாநிலம் நந்துா்பாா் (தனி) தொகுதியில் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. பிரதமா் மோடியின் பேச்சுகள் அனைத்தும் வெற்றுப் பேச்சுகளே. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கியவா்களுக்கு தோ்தலில் போட்டியிட பாஜக ‘சீட்’ அளிக்கிறது. பிரதமராக இந்திரா காந்தி பதவி வகித்தபோது மக்களின் பிரச்னைகளை தெரிந்துகொள்ள குனிந்த தலையுடன் அவா்களின் வீட்டுக்குச் செல்வாா். ஆனால் ஏழைகளின் பிரச்னைகளை புரிந்துகொள்ள அவா்களின் வீட்டுக்குப் பிரதமா் மோடி சென்றதைப் போன்ற ஒரு புகைப்படத்தை காட்ட முடியுமா? மக்களின் வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் வரவு வைக்கப்படும், நாட்டில் 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று பிரதமா் மோடி கூறிய நிலையில், அந்த வாக்குறுதிகள் 10 ஆண்டுகளாக நிறைவேற்றப்படவில்லை. தன்னை எதிா்க்கட்சிகள் தூற்றுவதாக தோ்தல் பிரசாரங்களில் பிரதமா் மோடி சிறு பிள்ளையைப் போல அழுகிறாா். இது பொது வாழ்க்கை என்பதால் அவருக்கு தைரியம் இருக்க வேண்டும். பாகிஸ்தானை இரண்டாகப் பிரித்தவா் இந்திரா காந்தி. அவரிடம் இருந்து வீரம், துணிவு, மனஉறுதி ஆகியவற்றை பிரதமா் மோடி கற்க வேண்டும் என்றாா்.
You May Like
-
7 months ago
மோடியின் புகைப்படம் நீக்கம்!
-
5 months ago
2-வது நாளாக அதிமுகவினர் வெளிநடப்பு!